Menu
Your Cart

யானைகளின் வருகை: யானையின் பாதையும் பயணமும்

யானைகளின் வருகை: யானையின் பாதையும் பயணமும்
-5 % Out Of Stock
யானைகளின் வருகை: யானையின் பாதையும் பயணமும்
கா.சு.வேலாயுதன் (ஆசிரியர்)
₹171
₹180
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
யானை மிதித்து விவசாயி பலி, வயலில் புகுந்து யானைகள் அட்டகாசம் போன்ற செய்திகளை நாம் அன்றாடம் கடந்து வருகிறோம். மனிதர்களை மிதித்துக் கொல்வதற்காகவே காட்டு யானை ஊருக்குள் வருகிறது என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. உண்மையில் ஏன் யானைகள் சேதத்தை ஏற்படுத்துகின்றன? மனிதர்களைக் காவு வாங்குகின்றன? என்று கேள்விகள் எழலாம். இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் தன் பேராசையால் பிற உயிர்கள் வாழும் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதன் விளைவாக காடுகள் அழிக்கப்பட்டன. இதனால் காட்டில் வாழும் உயிர்கள் நேராக மனிதர்கள் இருப்பிடம் தேடி வர ஆரம்பித்தன. உணவும், தண்ணீரும் இல்லாமல் வாயலை நாசம் செய்கின்றன. இப்போது சுற்றுச்சூழல், பிற உயிர்களுக்கான வாழிடம் குறித்த குரல்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்நிலையில் யானைகளுக்கும், மனிதர்களுக்குமான அன்பின் பிணைப்பு குறித்தும், சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்தும், இதைச் சுற்றி இயங்கும் அரசியல் குறித்தும் யோசிக்க வேண்டியது அவசியம். இந்த அனுபவங்களை மிக எளிமையாக ஆவணப்படுத்தியிருக்கிறார் கா.சு.வேலாயுதன். காட்டுயிர்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து எழுதி கவனம் பெற்று வரும் இவர், இந்து தமிழ் இணையதளத்தில் ‘யானைகளின் வருகை' என்று எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். மனிதர்கள் பாதிப்பு குறித்து மட்டுமே பேசிவரும் சூழலில், யானைகளுக்கு மனிதர்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நுட்பமாகவும் விரிவாகவும் அலசியிருக்கிறார் கா.சு.வேலாயுதன். காட்டு யானைகள் குறித்த உளவியல், தாக்குதலுக்கான பின்னணி என்று சகலத்தையும் இந்நூல் பேசுகிறது. தகவல் களஞ்சியமாக, அனுபவப் பகிர்வாக மட்டுமே நின்றுவிடாமல் காட்டுயிர்களுக்காக இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்ற புரிதலையும், தெளிவையும் ஏற்படுத்துவது நூலின் தனிச் சிறப்பு என்று சொல்லலாம். யானை - மனித மோதலுக்கு நிரந்தரத் தீர்வு மனித மனம் மாற வேண்டும். இதற்கு பழங்குடியின மக்களின் வாழ்நிலைக்குள்தான் திரும்பச் செல்வது அவசியம். நாகரிக காலத்தில் எவ்வளவோ தூரம் மாறி வந்துவிட்டாலும் காட்டுயிர்கள் மீது நாம் நேசம் கொள்வதே அவற்றுக்கு நாம் செய்யும் கடமை இல்லை... கடன்!
Book Details
Book Title யானைகளின் வருகை: யானையின் பாதையும் பயணமும் (yanaikalin varukai)
Author கா.சு.வேலாயுதன்
Publisher இந்து தமிழ் திசை (Hindu Thamizh Thisai)
Pages 221
Year 2019
Edition 02
Format Paper Back
Category Ecology | சூழலியல், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

''எங்களின் உசிருக்கு உசிரான ஜனாதிபதி அங்கிளுக்கு.. இல்லையில்லை. ஜனாதிபதி தாத்தாவுக்கு.. அகழி பழங்குடி நல ஹாஸ்டலிருந்து ஏழாம் வகுப்பு மாணவிகள் கண்ணகி, மாதவி எழுதிக் கொண்டது..!' பேனாவை வைத்துக்கொண்டு யோசித்தாள். இவள் விடுபடும் இடத்திலிருந்து மாதவி டிக்டேட் செய்ய ஆரம்பித்தாள். ''எங்களில் ஒருத்திக்கு அம..
₹295 ₹310